கடற்பாசி வளர்ப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை: ஐ.நா சபை

படத்தின் காப்புரிமை AFP
Image caption கோப்புப்படம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு தற்போது வளர்ச்சி அடைந்து வரும் கடற்பாசி வளர்ப்பு தொழிலுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.

கடற்பாசியானது உணவுகளிலும், உரங்களாகவும் பயன்பட்டு வருகிறது.

மேலும், அதன் சாறு சரும பராமரிப்பு முதல் பற்பசை வரை பயன்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட 27 மில்லியன் டன் கடற்பாசி தயாரிக்கப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption கடற்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

6 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை இந்த துறை ஈட்டி வருகிறது.

ஆனால், கடற்பாசி சில நேரங்களில் தீங்கு விளைவித்து, நோய்களை பரப்பியதற்கான ஆதாரங்களை ஐ.நாவின் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திற்கு எடுத்து செல்லப்பட்ட கடற்பாசி ஒன்று, அங்குள்ள உள்ளூர் செடிகளை மிஞ்சி பவள பாறைகளை அழித்துள்ளது.

ஐஸ் ஐஸ் என்ற பாக்டீரியா தொற்று பிலிப்பைன்ஸில் இருந்து சிவப்பு கடற்பாசி உடன் பரவி வருகிறது.

மேலும், மொசாம்பிக் மற்றும் தான்சான்யாவில் உள்ள புதிய பண்ணைகளை இது பாதித்து வருகிறது.

இருப்பு வைக்க உதவியாக விதைப் பண்ணைகளை உருவாக்கவும் நோய்களை முறையாக கண்காணிக்கவும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.