நீதிபதிகள் மீது ராபர்ட் முகாபே பாய்ச்சல்

Image caption அதிபர் ராபட் முகாபே

ஜிம்பாப்வேயில், வன்முறையில் முடிந்த அரசிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி அளித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ராபட் முகாபே.

நீதிபதிகள் அமைதி குறித்து தீவிரமாக கருத்தில் கொள்ளவில்லை என்றும் முடிவுகளை எடுக்கும் போது அசட்டையாக இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையை அதிபர் மிரட்டுவதாக எதிர்கட்சி தலைவர் டென்டய் பீட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

திங்களன்று எதிர்தரப்பு ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்திற்கு விதிக்கப்பட்ட இரண்டு வார தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளனர்.

ஜிம்பாப்வேயில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி கொண்டு இருப்பதால் சமீப காலங்களில் நாட்டில் வன்முறை போராட்டங்கள் அதிகரித்து கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.