எகிப்து: மறைந்த படையினருக்கு வைக்கப்பட்ட சிலையில் பாலியல் சர்ச்சை

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப்படம்

எகிப்தில் மறைந்த படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நிர்மாணிக்கப்பட்ட சிலை ஒன்று, ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது போல பிரதிபலிப்பதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து தற்போது மாற்றப்பட உள்ளது.

தியாகங்களின் தாய் என்ற தலைப்பில் சிற்பி உருவாக்கிய சிலையில், படை வீரர் ஒருவரின் கைகள் எகிப்தை குறிக்கும் விவசாயப் பெண்ணை தனது கைகளால் அணைத்திருப்பார். எகிப்து பாதுகாப்பாக இருக்கிறது என்பதை இந்த செய்கை உணர்த்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இது பாலியல் நடவடிக்கை போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமூக மனப்பான்மை என்பது பாரம்பரிய பழமைவாதமாக கருதப்படும் சோஹாக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள நகரின் மத்தியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை.

தற்போது, இந்த சிலையை சீரமைக்குமாறும், இதனை அமைக்க உத்தவிட்டது யார் என்ற விசாரணைக்கும் உள்ளூர் ஆளுநர் உத்தவிட்டுள்ளார்.