ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி கண்ட இளம் அரசியல் ஆர்வலர்கள்

  • 5 செப்டம்பர் 2016

சீன பிராந்தியத்திலே அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு சாதனை படைத்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் அரசியல் ஆர்வலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இளம் அரசியல் ஆர்வலர்கள்

ஜனநாயக சார்பு வேட்பாளர்கள் தற்போது கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த போதுமான இடங்களை பெற்றுள்ளனர்.

இதன்மூலம், சீன பெருநிலப்பகுதியிலிருந்து ஹாங்காங் சுய நிர்ணயம் பெறும் சட்டத்தை தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கோரி சில வேட்பாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்ததாக, சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், இந்த தேர்தல் குறித்து மிகக்குறைவான அளவில் சீன பெருநிலப்பரப்பில் உள்ள உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

தொடர்புடைய தலைப்புகள்