பிரிட்டன்: ஐ.எஸ். ஆதரவுக்கு ஊக்கமளித்த இஸ்லாமியவாதப் போதகருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை

  • 6 செப்டம்பர் 2016
படத்தின் காப்புரிமை Reuters

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரின் ஆதரவுக்கு ஊக்கமளித்ததற்காக பிரிட்டனின் மிகவும் பிரபலமான இஸ்லாமியவாதப் போதகர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, கடவுள் மேன்மை மிக்கவர் என்று பொருள்படும் அல்லாகு அக்பர் என்று அன்ஜிம் சௌத்ரியின் ஆதரவாளர்கள் கூக்குரலிட்டனர்.

படத்தின் காப்புரிமை

அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த முகமது மிஸாநுர் ரஹ்மானும் இதே தண்டனையை பெற்றுள்ளார்.

அலி முகாஜிரோன் என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்த 49 வயதான அன்ஜிம் சௌத்ரி, இஸ்லாமிய அரசு குழுவின் தலைவருக்கு விசுவாச உறுதிமொழியை இணையதளத்தில் வெளியிட்ட பின்னர் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

அவரை ஆபத்தானவர் மற்றும் திட்டமிட்டு செயல்படுபவர் என்று நீதிபதி விவரித்திருக்கிறார்.