அலெப்போவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி

படத்தின் காப்புரிமை UGC

சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் குளோரின் வாயு மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட பிறகு, ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்த நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். மூச்சுத்திணறலுக்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அசாத் அரசு தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்