ஃபிரான்ஸ் ஏல நிறுவனத்தில் திருடிய ஊழியர்களுக்கு சிறை தண்டனை

படத்தின் காப்புரிமை Getty

பாரிஸில் உள்ள மதிப்பிற்குரிய ஏல நிறுவனம் ஒன்றின் 40 ஊழியர்களுக்கு ஃபிரான்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

பல வருடங்களாக ஆயிரக்கணக்கான பொருள்களை அவர்கள் திருடியுள்ளனர்; ஏலத்திற்கு விடும் முன்பு அதை பத்திரப்படுத்தும் பொறுப்பில் உள்ள ட்ரவுட் விடுதியின் சுமை தூக்கும் பணியாளர்கள், அப்பொருட்களை எடுத்து தங்கள் கணக்கில் அதை விற்றுவந்தனர் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

இந்த செயலை அவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒரு கூடுதல் ஆதாயமாக கருதினர்;சுமைதூக்கும் பணியாளார் ஒருவர் தொலைந்துபோன 19 ஆம் நூற்றாண்டின் புதுமையான பிரான்ஸ் ஒவியரான கீஸ்டாவ் கூர்பேயின் ஓவியம் ஒன்றுடன் தென்பட்டப்போது இதுகுறித்த சந்தேகம் எழுந்து, இந்த பல வருட திருட்டு அகப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்