குபான் எதிர்க்கட்சிக்கு ஃபிரான்ஸ் பிரதமர் ஆதரவா?

படத்தின் காப்புரிமை Getty

கடந்த மாதம் நடைபெற்ற விவாதத்திற்குரிய அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு குபான் ஆட்சியாளர்களை ஃபிரான்ஸ் பிரதமர் மனியல் வாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகவும் நெருங்கிய இடைவெளியில் தற்போதைய அதிபர் அலி போங்கோ வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகு, வன்முறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

அந்த வாக்குகளை மீண்டும் எண்ணுவது புத்திசாலித்தனமானதாக இருக்கும் என்று வானொலி நேர்முகம் ஒன்றில் கூறிய வாஸ், முன்னாள் ஃபிரெஞ்சு பகுதியாக இருந்த அங்கு வாழ்ந்து வருகின்ற 14 ஆயிரம் ஃபிரெஞ்சு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தன்னுடைய முதன்மையாக நோக்கம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஃபிரெஞ்சு குடியுரிமை உள்பட இரு குடியுரிமைகளை பெற்ற இதே எண்ணிக்கையிலான குபான் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல்களின் மத்தியில் சுமார் டஜன் கணக்கான குடிமக்களிடம் தொடர்பு கொள்ள அதிகாரிகள் இன்னும் முயன்று வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்