சுதந்திர ஹாங்காங் செயல்பாடுகளுக்கு தண்டனை: சீனா மிரட்டல்

படத்தின் காப்புரிமை EPA

சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று சீனா தெரிவித்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான ஹாங்காங்கின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் பலர் தேந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து செயல்பாடுகளையும் சீனா எதிர்க்கிறது என்று சீனாவின் ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகங்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஹாங்காங் தன்னை நிர்வகித்து கொள்வதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி எவ்வித விவாதங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்க சீனா விரும்புவதாக தோன்றுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்