ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் கடுமையான நிலைப்பாடு

  • 6 செப்டம்பர் 2016
படத்தின் காப்புரிமை

ஹாங்காங் அதனுடைய விவகாரங்களில் எவ்வளவு கட்டுப்பாடுகளை கொண்டிருக்கலாம் என்பது பற்றி அதன் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களோடு சீனா ஒருவித மோதல் போக்கை கொண்டுள்ளதாக தெரிகிறது.

சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவாக செயல்படுவோர் தண்டனையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தெடுக்கப்பட்டவர்களை சீன பேச்சாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஆனால், புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களில் உருவரான நாதன் லா ஹாங்காங் அதிக அதிகாரம் பெற வேண்டுமென விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில், ஹாங்காங்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கிற பல செயற்பாட்டாளர்கள் உள்ளூர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்