அகதிகள் கடத்தல் சந்தேகத்தில் 21 பேர் கைது; இத்தாலி காவல்துறை அதிரடி

  • 6 செப்டம்பர் 2016

பழைய கார்களின் தொடரணியை பயன்படுத்தி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குள் அகதிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஐரோப்பா முழுவதுமுள்ள 21 பேரை, இத்தாலி காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty

போலியான நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்த வாகன வலையமைப்பை பயன்படுத்தி, வடக்கு பகுதிக்கு குடியேறிகளை அனுப்புவதற்கு, பயணிக்கு தலா 500 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இந்த சந்தேக நபர்கள் கட்டணம் வசூலித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சரியான ஆவணங்கள் இல்லாத பல குடியேறிகள் இருந்த காரோடு இத்தாலியர் ஒருவர் ஹங்கேரியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த புலனாய்வு தொடங்கியது.

தொடர்புடைய தலைப்புகள்