மாமிசம், அழகு சாதன தயாரிப்புக்கு கழுதை ஏற்றுமதி: தடை விதித்தது மேற்கு ஆப்ரிக்க நாடு

  • 6 செப்டம்பர் 2016

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் கழுதைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; சமீபத்தில் இந்த வர்த்தகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து கழுதைகளின் எண்ணிக்கை குறைந்lதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Image caption கோப்புப் படம்

கடந்த நிதியாண்டில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான கழுதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன; தென் கிழக்கு நைஜீரியாவில் விற்கப்படும் கழுதை கறிக்கு இந்த நைஜர் முதன்மை ஆதாரமாக உள்ளது.

பின்பு கழுதை தோல் சீனாவிற்கு அனுப்பப்படுகிறது; அங்கு மருத்துவ டானிக், வயதை குறைத்து காட்டும் கிரீம்கள், அப்ரோடிசியாக் மருந்துகளில் பயன்படுத்த கழுதை தோலில் இருந்து ஜலடின் என்னும் பொருள் எடுக்கப்படுகிறது.

சமீப வருடங்களில், இந்த ஜலடினின் விலை ஒரு துண்டு நான்கு டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை உயர்ந்துள்ளது; நைஜரின் அண்டை நாடான புர்கினா ஃபாசோ கழுதை ஏற்றுமதிக்கு கடந்த வாரம் தடை விதித்தது.

கழுதை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும் சரக்குகள் மற்றும் குழந்தைகள் ஏற்றிச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்