போதை செடிகளுக்கு சோமாலியா விதித்த தடையை ஏற்க தன்னாட்சிப் பகுதி மறுப்பு

பகுதியளவு தன்னாட்சி கொண்ட சோமாலிய பகுதிகளான பூண்ட்லாந்து மற்றும் சோமாலி நிலப்பரப்பு, அண்டை நாடான கென்யாவிலிருந்து ஊக்க மருந்தாக பயன்படுத்தப்படும் காட் வகைச் செடிகளை இறக்குமதி செய்யும் விமானங்களுக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு கீழ்படிய மறுத்துள்ளன.

படத்தின் காப்புரிமை

தலைநகர் மொகதிஷுவை தவிர வழக்கமாக ஒரு நாளில் இயங்கும் 16 விமானங்கள் அங்கு இயங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், காட் செடிகளுக்கு தடை விதித்தன; அத்தடைக்கு முன்னர் அரை மில்லியன் விவசாயிகள் காட் செடிகளை பயிர் செய்தனர்.

இந்த தடையின் தாக்கத்திலிருந்து விவாசாயிகளை பாதுகாக்க கென்ய அரசு சுமார் பத்து மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்