தென் ஆப்ரிக்காவில் 8 வயது சிறுமிக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் அரசு

தென் ஆப்ரிக்காவில் 8 வயது சிறுமியின் குடியுரிமையை ரத்து செய்ய முயன்ற அரசுக்கு எதிராக மனித உரிமை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட உள்ளனர்.

படத்தின் காப்புரிமை

அச்சிறுமிக்கு ஆதரவாக கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கியூபா நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு தென்னாப்ரிக்காவில் பிறந்தவர் அந்தக் குழந்தை. தென் ஆப்ரிக்காவின் பிறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் அச்சிறுமியால் பள்ளிக்கு செல்ல இயலாது.

இந்த வழக்கில் சிறுமியின் தரப்பு வென்றுவிட்டால் இம்மாதிரியான மேலும் பல குடியேறிகளின் குழந்தைகள் தரப்பு வழக்கிற்கு வழிவகுக்கும் என அரசு அச்சத்தில் உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழை மறுத்து சட்டத்தை மீறுவதாக அரசின் மீது குழந்தைகள் நல வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்