பாரிஸ் தேவாலயம் எதிரில் நின்ற எரிவாயு நிரம்பிய கார் ; இருவர் கைது

சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் உள்ள நாட்ர டாம் தேவாலயத்திற்கு எதிரில் எரிவாயு கலன்கள் நிறைந்த கார் ஒன்றை கண்டறிந்தது தொடர்பாக இருவரை ஃபிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப் படம்

காரின் முன் இருக்கையில் காலியான கலமும், பின்புறம் பொருட்களை வைக்கும் ட்ரங்க் பகுதியில், எரிவாயு நிரப்பப்பட்ட ஆறு கலன்களும் அதன் சிக்னல் விளக்கு ஒளிரும் நிலையில் ஆட்கள் இன்றி இருந்தது.

வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை; ஆனால் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது.

இருவரும் பாதுகாப்பு சேவைகளுக்கு அறியப்பட்டவர்கள் எனவும், அதில் ஒருவர் அதிதீவிர கொள்கைகளை கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் என ஃபிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் அமைப்பினர் நட்த்திய தாக்குதலில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஃபிரன்ஸ் அதிக பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய தலைப்புகள்