இவ்வுலகில் வாழ தற்போதைய காலகட்டமே சிறந்தது: ஒபாமா

ஆசிய இளைஞர்கள் அடங்கிய பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க அதிர் ஒபாமா, இவ்வுலகில் வாழ தற்போதைய காலகட்டத்தை விட சிறப்பான காலகட்டம் வேறெதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கோப்புப் படம்

லாவோஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சங்க உச்சிமாநாட்டையொட்டி ஆசிய இளைஞர்கள் மத்தியில் உரையாடிய போது, தற்போதுள்ள அதீத தகவல் பரிமாற்றத்தால், உலகம் வீழ்ந்து கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் உருவாகிறது என்று ஒபாமா கருத்து தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், மனித வரலாற்றில் உங்களுக்கு இவ்வுலகில் எப்போது பிறக்க வேண்டும் என்று ஒரு வாய்ப்பளிக்கப்பட்டால், தேசியம், மதம் அல்லது இனம் ஆகியவை எப்படி இருப்பினும், தற்போதைய காலகட்டமே மிகவும் சிறந்தது என்று ஒபாமா கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்