அதிபர் நாற்காலியில் தொடர்வதற்காக காய் நகர்த்தும் ஒல்லாந்

ஃபிரான்ஸ் கடற்கரைகளில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை குறித்து எழுந்த விமர்சனங்கள் தேவையற்றவை எதிரானது எனத் தெரிவித்த ஒல்லாந், நாட்டின் எதிர்காலத்தை நோக்கிய அவரின் கொள்கையை முன் வைத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

பாரிஸில் இடது சாரி ஆதரவாளர்களுடன் பேசிய அவர், நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை அழிக்க முயல்பவர்களுக்கு எதிராக பேசி அவர் தன்னை ஃபிரான்ஸ் குடியரசின் கொள்கைக் காப்பாளனாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

ஒல்லாந்தின் இந்த பேச்சு அடுத்த வசந்த காலத்தில் அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கப் போவதை தெளிவாக காட்டுவதாக பிபிசி யின் பாரிஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் கருத்துக் கணிப்பில் அவருக்கு ஆதரவாக 15 சதவீதம் பேர்தான் ஆதரவு தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்