லண்டன்: தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து இருவர் கைது

படத்தின் காப்புரிமை Reuters
Image caption லண்டன் விமான நிலையம்

மேற்கு லண்டனில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட இரு ஆண்களை பிரிட்டிஷ் போலிசாரால் கைது செய்துள்ளனர்.

லண்டனை சேர்ந்த அந்த இருவரும் 19 மற்றும் 20 வயது உடையவர்கள்.

அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், அதில் ஒருவர் மீது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேம் எழுந்துள்ளது.

உளவுத்துறை தலைமை தாங்கி நடத்திவரும் விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அது மேலும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் பிரிட்டன் உள்ளது.