தென் சீனக் கடல் பகுதி சர்ச்சை: சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை சீனா மதிக்க ஒபாமா அறிவுரை

தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினை சீனா கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

லாவோஸில், தென் கிழக்கு ஆசிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஒபாமா, ஹாக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு, தென் சீனக் கடல் பகுதியில் வெவ்வேறு நாடுகளுக்கு உள்ள கடல்சார் உரிமைகளை தெளிவுபடுத்த உதவியதாக குறிப்பிட்டார்.

தென் சீனக் கடல் பகுதியில், தான் கோரிய கடல் சார் உரிமைகளுக்கு எதிராக நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்பினை அங்கீகரிக்க சீனா மறுத்து விட்டது.

இத்தகைய சர்சைகளில் தீர்வு ஏற்படுத்தவும், இவற்றை அமைதியான முறையில் சமாளிக்கவும் அமெரிக்கா விரும்புகிறது என்றும் ஒபாமா தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்