பிரான்ஸ்: ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக சந்தேகிக்கப்பட்ட பெண் கைது

படத்தின் காப்புரிமை Reuters

பிரான்ஸில் எரிவாயு கலங்கள் நிரப்பப்பட்ட கார் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர், தான் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் ஆயுத குழுவினரின் விசுவாசி என வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலிசாருக்கு கிடைத்த ஓர் ஆவணத்தில், மூன்று பேரில் இளைய வயதுடையவரை இனெஸ் மதானி என்று அடையாளம் கண்டுள்ளனர். மேலும், 19 வயதுடைய அந்த பெண் தான் தொடர்பை உறுதிபடுத்தியுள்ளார்.

பாரிஸின் புறநகர் பகுதியில், அப்பெண்ணை போலிசார் கைது செய்ய முயற்சித்த போது, அப்பெண் போலிசாரை கத்தியால் தாக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் போலிசாரால் சுடப்பட்டார்.

பிரான்ஸில் தீவரவாத தாக்குதல்களை நடத்த மூன்று பெண்களும் திட்டமிட்டிருந்ததாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மிகக் கொடூர இஸ்லாமியவாத தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்