25 ஆயிரம் வேலைகளை குறைக்க ஜிம்பாப்வே திட்டம்

படத்தின் காப்புரிமை EPA

25 ஆயிரம் வேலைவாய்ப்புகளை குறைத்து அரசின் செலவினங்களை குறைக்க திட்டமிடுவதாக ஜிம்பாப்வே அறிவித்திருக்கிறது.

ஊதியம் குறைப்பு, ஊக்கத்தொகை இடைநீக்கம், வெளிநாடுகளில் குறைவான தூதரகங்களையும் துணை தூதரங்களையும் கொள்வது ஆகியவையும் இந்த நடவடிக்கையில் அடங்குவதாக நிதி அமைச்சர் பேட்ரிக் சினமாசா கூறியிருக்கிறார்.

இந்த நடவடிக்கைகளை நகைச்சுவைகள் என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சி, ஊதியம் வழங்க அரசிடம் பணமில்லை என்பதை ஏற்றுகொள்வதை இந்த திட்டங்கள் காட்டுவதாக கூறியுள்ளது.