காட் போதை இலை வர்த்தகத்தை மீட்க கென்யா முயற்சி

படத்தின் காப்புரிமை

போதை தரக்கூடிய காட் இலையை கொண்டு செல்லும் விமானங்களைத் தடை செய்யும் தீர்மானத்தை சோமாலிய அரசு திரும்ப பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கென்யா தெரிவித்திருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை சோமாலிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடை ஒரு நாளைக்கு சுமார் அரை மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை பாதித்திருக்கிறது.

காட் போதை இலையை அதிகமாக வர்த்தகம் செய்வது பற்றி கலந்துரையாட பிரிவினைவாத சோமாலிலாண்ட் குடியரசின் மூத்த அதிகாரி சமீபத்தில் நடத்திய சந்திப்பிற்கும் இந்த தடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கென்ய அரசு செய்தி தொடர்பாளர் எரிக் கிர்ரே ஈத்தே மறுத்திருக்கிறார்.

அதிபர் ஒகூரு கென்னியாட்டா இதில் ஈடுபட்டிருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

பல மணி நேரம் வாயில் போட்டு மெல்லப்படும் காட் போதை இலை, சோமாலியாவில் மிகவும் பிரபலமானது. ஆனால் அங்கு பயிரிடப்படுவதில்லை.

தொடர்புடைய தலைப்புகள்