வங்கதேச தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு பின்னரும் தீயணைக்கப் போராட்டம்

படத்தின் காப்புரிமை Reuters

பல அடுக்குமாடி தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியெரிய தொடங்கி 24 மணிநேரத்திற்கு மேலாகியும், வங்கதேச அவசரகால பணியாளர்கள் இன்னும் அதனை அணைக்கப் போராடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை epa

தலைநகர் டாக்காவின் வடக்கே டோங்கியில் இருக்கும் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA

பலரை காணவில்லை. அங்கே சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகவும் எளிதாக தீப்பிடித்து கொள்கின்ற பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர தடையாக உள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் மோசமான தீ விபத்து சம்பவமாக இது கருதப்படுகிறது,

பல விசாரணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொதிகலன் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தொடக்கப் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது,

தொடர்புடைய தலைப்புகள்