வட கொரியா அணுகுண்டு சோதனை: தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா

  • 11 செப்டம்பர் 2016
படத்தின் காப்புரிமை AFP

மிகவும் சமீபத்தில் வட கொரியா நடத்திய அணுகுண்டு சோதனைக்கு தண்டனை அளிக்கும் விதமாக தன்னிச்சையான செயல்பாடுகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வட கொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

ஐநா பாதுகாப்பு அவை ஆலோசித்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு கூடுதலான நடவடிக்கைகளாக இவை இருக்கும் என்று தூதர் சுங் கிம் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை epa

ஜப்பான் மற்றும் தென் கொரியாவோடு ஒருங்கிணைந்து எடுக்க வேண்டிய செயல்பாடுகளையும் அமெரிக்கா கருத்தில் கொண்டு வருவதாக டோக்கியோவில் அதிகாரிகளை சந்தித்து வருகின்ற கிம் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

வட கொரியா வெள்ளிக்கிழமை நடத்திய அணுகுண்டு சோதனை அந்நாடு இதுவரை சோதித்திருக்கும் 5 சோதனை முயற்சிகளில் மிகவும் சக்தி வாய்ந்த்தாக இருப்பதால், அணு ஆயுதங்களை உருவாக்குவதில் அந்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.