இட்லிப், அலெப்போ நகரங்களில் விமானத் தாக்குதல்கள், 100-க்கு அதிகமானோர் பலி

படத்தின் காப்புரிமை AFP

சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்திற்கு முன்னதாக, போரிடும் பல தரப்பினரும் தங்களுடைய நிலைகளை பலப்படுத்தி கொள்வதற்காக, சிரியாவின் இட்லிப் மற்றும் அலெப்போ நகரங்களில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து எழுகின்ற புகை மேகங்களையும், இடிபாடுகள் நிறைந்திருக்கும் தெருக்களில் காயமுற்றோரை மக்கள் தூக்கி செல்வதையும் இட்லிப் நகரில் எடுக்கப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன.

ரஷியாவும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ள போர்நிறுத்தம் திங்கள்கிழமை முதல் அமலாகும்.

படத்தின் காப்புரிமை AFP

ஜெனிவாவில் எட்டப்பட்ட இந்த போர்நிறுத்த உடன்படிக்கையை சிரியா அரசும், முக்கிய எதிரணி பேச்சுவார்த்தை குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த போர் நிறுத்தம் நடைமுறையாகி குறைந்தது ஒரு வாரம் நீடித்தால், அமெரிக்காவும், ரஷியாவும் இஸ்லாமியவாத தீவிரவாதிகளுக்கு எதிராக விமானத் தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்த துவங்கும்.

தொடர்புடைய தலைப்புகள்