சிரியாவில் நடப்பது ஐஎஸ் அமைப்புக்கு எதிரான சண்டையின் முதல் படி: எர்துவான்

சிரியாவின் உள்ளே நடக்கும் தற்போதைய நடவடிக்கை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையின் முதல் படி என்று துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

துருக்கியில் மேலும் தாக்குதல் நடத்துவதை தடுக்க இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பை அழிக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் எர்துவான் தெரிவித்துள்ளார்.

குர்திய தீவிரவாத பிகேகே அமைப்பு, ஜுலை மாதத்தில் நடந்த ஆட்சிக் கவிழ்பு முயற்சிக்கு பிறகு அதன் தாக்குதலை தீவிரப்படுத்த முயற்சித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல், டெல் எல் ஹவா நகரத்தை சுற்றி மூன்று கட்டடங்கள், ஒரு வாகனம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை தாக்கி இருபது ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்