தென் சீனக் கடல் பகுதியில் சீனா மற்றும் ரஷியா நடத்தும் கடற்படை பயிற்சி

படத்தின் காப்புரிமை Reuters

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில், சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் இணைந்து எட்டு நாள் கடற்படை பயிற்சிகளை தொடங்கியுள்ளன.

தீவை கைப்பற்றுவது போல் உருவகப்படுத்தப்பட்ட செய்கை அடங்கிய இந்த பயிற்சி, வழக்கமான ஒன்று என்று சீனா தெரிவித்துள்ளது; சீனாவும் அண்டை நாடுகளும் உரிமைக் கோரும் தென் சீனக் கடலில் இம்மாதிரியான பயிற்சி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஜுலை மாதத்தில் சீனாவிற்கு எதிராக சர்வேதேச தீர்ப்பாயம் தீர்பளித்த போது, சீனாவிற்கு ஆதரவு வழங்கிய முக்கிய நாடு ரஷியா ஆகும்.

கடந்த மாதம் சீனாவிலிருந்து பேசிய அமெரிக்க பசிபிக் கடற்கரையின் அட்மிரல் ஸ்காட் ஷிவ்ட், இந்த பகுதியில் உண்மையான குண்டுத் தாக்குதல் ஒத்திகைகளை நடத்துவது இந்த பிராந்தியத்தின் ஸ்திர தன்மையை அதிகரிக்க உதவாது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்