ஹிலாரி குணமடைய டிரம்ப் வாழ்த்து

படத்தின் காப்புரிமை AP

ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா என்று கண்டறியப்பட்ட நிலையில் அவர் விரைவாக குணமடைவார் என நம்புவதாக அதிபர் தேர்தலில் ஹிலாரியின் போட்டியாளரான, டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்; ஹிலாரிக்கு உடல்நிலை சரியில்லை என்று கண்டறியப்பட்டு, முதல்முறையாக டிரம்ப் இவ்வாறு வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளாரான டிரம்ப், அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் உடல்நிலை ஒரு முக்கிய அம்சம் எனத் தெரிவித்துள்ளார்; 70 வயதாகும் இந்த தொழிலதிபர் தன்னுடைய உடல்நிலை குறித்து குறிப்பான சில தகவல்களை வெளியிடுவதாக உறுதியளித்தார்.

அமெரிக்க செய்தி ஊடகமான ஃபாக்ஸ் நியூசிற்கு தொலைபேசியில் அவர் அளித்த பேட்டியில், இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறவிருக்கும் முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அவரின் இளம் போட்டியாளரை காண ஆர்வமுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.