Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 செப்டம்பர், 2004 - பிரசுர நேரம் 14:26 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
விண்ணும் வசப்படும்
 
இந்தியப் பூர்வீக அமெரிக்க விண்வெளி வீரர்
கல்பனா சாவ்லா
விண்வெளிப் பயணங்களின் அற்புதம், வினோதம், ஆபத்துகள், ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நிகழ்த்திய சாதனைகள், அடைந்த ஏமாற்றங்கள், எதிர்காலக் கனவுகள் குறித்த புதிய சித்திரத் தொடர்.

நிறைவுப் பாகத்தில் விண்வெளிப் பயணங்களில் ஆபத்துகள் இருந்தாலும் இயந்திர மனிதனை மட்டும் பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த விஞ்ஞானிகள் தயாராக இல்லை, மனிதனை அனுப்பவே அவர்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்த கருத்துகளும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதில் தொடங்கி மனிதனின் விண்வெளிக் கனவு எவ்வாறு விரிகிறது என்பது பற்றிய தகவல்களும் இடம்பெறுகின்றன.


விண்வெளியில் பறந்த அனுபவம் பற்றி விண்வெளி வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு விவரிப்பதையும் அதே நேரம் விண்வெளிப் பயணங்களில் ஏற்பட்ட விபத்துகள் குறித்து அவர்கள் கொண்டுள்ள கவலைகள் அச்சங்கள் குறித்தும் ஐந்தாம் பாகத்தில் நேயர்கள் கேட்கலாம்.


விண்வெளியில் செய்மதியைச் செலுத்தவல்ல ராக்கெட் தொழில்நுட்பத்தில் இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனைகள், அடைந்த தோல்விகள் பற்றியும் அணுசக்தியால் இயங்கும் ராக்கெட்டுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நேயர்கள் நான்காம் பாகத்தில் கேட்கலாம்.


மூன்றாம் பாகத்தில், கலங்களை விண்ணில் ஏவ உதவும் ராக்கெட் தொழில்நுட்பம் வந்தது எப்படி? வளர்ந்தது எப்படி? எனபவை பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெறுகின்றன.


விண்வெளியில் சாதனை படைக்கத் துடிக்கும் நாடுகளின் வரிசையில் ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் இந்தியா ஆகியவை ஆற்றிவரும் பணிகள் , மேற்கொண்டுவரும் திட்டங்கள் ஆகியவை குறித்து இரண்டாம் பாகம் அலசுகிறது.


சுமார் 100 கிகோமீட்டர் உயரத்திலேயே தொடங்குகிற விண்வெளிக்கு எல்லையே இல்லை. அங்கு முதலில் சென்றது யார்? விண்வெளியை முதன் முதலில் தொட்ட ராக்கெட் எது? அதை செலுத்திய நாடு எது? மனிதன் நிலவில் கால்பதித்த தருணம் எப்படிப்பட்டது? போன்ற பல சுவாரஸ்ய தகவல்கள்.

குறிப்பு: - இந்தச் சித்திரத் தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் இதே பக்கத்தில் தொடர்ந்து இடம்பெறும் என்பதை நேயர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள