![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | ![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அமைச்சர் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகஸ்டு 12ம் தேதி இரவு அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே இருந்த மற்றொரு வீட்டின் மாடியில், குளியலறையில் மறைந்திருந்த தொலைநோக்கிக் கருவி பொருத்தப்பட்ட(சினைப்பர் துப்பாக்கி) துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கதிர்காமரின் தலை மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்ததாகவும், மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லாமல் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கமிடையிலான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு கொல்லப்படும் மிக மூத்த அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஆவார். இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் மீதுதான் எங்களின் சந்தேகம் என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்கிறார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவின் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன். 73 வயதான கதிர்காமர், இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களுக்கு மிக நெருக்கமானவர், விடுதலைப் புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலிகளின் இந்த மறுப்பை ஏற்க முடியாது என்று இலங்கை அரச தரப்பினர் கூறுகின்றனர். போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில் மூத்த அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையின் மூலம் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார் அரசியல் ஆய்வாளர் டி. பி.எஸ். ஜெயராஜ். இந்தியாவின் ஒரு நெருங்கிய நண்பராகக் கருதப்பட்டவர் அமைச்சர் கதிர்காமர். இவரது கொலையை அடுத்து இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து ஆராய்கிறார் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தெற்காசிய விவகாரப் பேராசிரியர் பி. சகாதேவன். |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|