Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
வீரப்பன் வேட்டையில் பாதிக்கப்பட்டோர்
 
வீரப்பனைக் கொன்ற சந்தோசத்தில் அதிரடிப்படையினர்
வீரப்பனைக் கொன்ற சந்தோசத்தில் அதிரடிப்படையினர்
வீரப்பன் கொல்லப்பட்டு ஓராண்டாகியுள்ள நிலையில், அதிரடிப் படையினரின் வரம்புமீறல்களால் பாதிக்கப்பட்டிருந்த கிராமவாசிகளின் நிலை - பெட்டகம்

சந்தனக்கடத்தல் வீரப்பனும் அவரது சகாக்கள் மூவரும் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றோடு ஓராண்டாகிறது.

வீரப்பன் வேட்டையின்போது குறிப்பாக தொண்ணூறுகளின் முற்பகுதியில் கர்நாடக எல்லையை ஒட்டிய தமிழக கிராமங்களில் அப்பாவி மலைவாழ் மக்கள் அதிரடிப் படையினரால் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளானதாக புகார்கள் எழுந்திருந்தன.

இந்தப் புகார்களின் விளைவாக அமைக்கப்பட்டிருந்த சதாசிவா விசாரணைக் கமிட்டி தனது அறிக்கையை மனித உரிமைகள் ஆணையத்திடம் 2003ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே சமர்ப்பித்திருந்தாலும் அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்ன, அவ்வறிக்கை தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது இதுவரை பொதுமக்களிடம் அறிவிக்கப்படாத நிலை இருந்துவருகிறது.

பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை நிலையையும் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துகளையும் தொகுத்து எமது சென்னை நிருபர் டி.என்.கோபாலன் வழங்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.

பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு வேண்டி பிரதமரிடம் புகார்

ராஜா
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடி படையினரால் துன்பத்துக்கு ஆளாகி தற்போது சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கும் பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தற்சமயம் நிராதரவான நிலையில் இருக்கிறார்கள் என்றும் இவர்களுடைய பிரச்சினைகளை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் சிலருடன் தான் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்ததாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.

மறுவாழ்வு தொடர்பான கோரிக்கைகளையும், மக்களுக்கு தீங்கிழைத்த குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், மனித உரிமை ஆணையம் நியமித்த சதாசிவா கமிட்டி அதிரடிப்படையின் வரம்புமீறல்கள் குறித்து வழங்கிய அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் முன்வைத்ததாக அவர் கூறினார்.

தகவல்பெறும் உரிமைச் சட்டம் இந்தியாவில் அமலில் இருக்கும் நிலையில் சதாசிவா கமிட்டியின் அறிக்கை பொதுப்படையாக வெளியிடப்படாதது ஏன் என்று சட்டரீதியாகவும் இவ்விவகாரத்தை எடுத்துச்செல்ல முடியும் என்று ராஜா கூறினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள