Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2006 - பிரசுர நேரம் 12:56 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம்
 

விருத்தாசலம் நிலவரம்

கட்சியின் ஆரம்ப விழாவில் விஜயகாந்த்
கட்சியின் ஆரம்ப விழாவில் விஜயகாந்த்
புதிதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் விருதாசலம் தொகுதியில் போட்டியிருகிறார்.

தான் ஆட்சிக்கு வந்தால் வீடுதோறும் ஒரு பசுமாடு வழங்குவதாக அவர் கூறுகிறார். ஊழலை ஒழிப்பேன் என்றும் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்றும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.

அவரது பிரச்சார கூட்டத்தை கேட்பதற்காகவும், அவரைப் பார்ப்பதற்காகவும் ஏராளமான மக்கள் கூடுகின்றனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு கணிசமாக இருப்பதாக நமது நிருபர் எல் ஆர் ஜெகதீசன் கூறுகிறார்.

விஜயகாந்த் போட்டியிடும் விருதாசலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான வாக்கு வங்கியாக விளங்கும் வன்னியர்கள் கணிசமாக இருந்தாலும், தன்னால் வெற்றிபெறமுடியும் என்று நம்பிக்கையை வெளியிட்ட விஜயகாந்த், தான், ஜாதி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு சிந்திப்பதாகவும் கூறினார்.

விஜயகாந்துக்கு ஆதரவு எப்படியுள்ளது. அவரால் வெற்றி பெற முடியுமா என்பதை இந்தப் பெட்டகத்தில் நேயர்கள் கேட்கலாம்.


வன்னியர் வாக்கு யாருக்கு?

டாக்டர். ராமதாஸ்
டாக்டர். ராமதாஸ்
வட தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்கு யாருக்கு என்பது இந்தத் தேர்தலில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 12 வீதமாக இருக்கும் வன்னியரின் வாக்குகள் எண்பதுகளில் வன்னியர் சங்கமாகத் தோன்றி, பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியிருக்கும் பாமகவுக்குத்தான் என்று பரவலான கருத்துகள் காணப்படுகின்றன.

ஆனால் அதனை மறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வன்னியர் வாக்குகள் தற்போது யாருக்கு ஆதரவாக இருக்கின்றன, இந்தத் தேர்தலில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பன போன்ற விடயங்களை இந்தப் பெட்டகத்தில் ஆராய்கிறார் எமது செய்தியாளர் எல்.ஆர். ஜெகதீசன்.


தொண்டாமுத்தூர் நிலவரம்

கண்ணப்பன்
கண்ணப்பன்
அஇஅதிமுக செல்வாக்கு கணிசமாக இருப்பதாகக் கருதப்படும் கோவை மாவட்டத்தில், கோவை மாநகரை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூர் தொகுதி பலரது கவனத்தையும் ஈர்த்திருககிறது.

இங்கே சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும், மதிமுக பொருளாளர் கண்ணப்பனும் மோதுகின்றனர்.

பாரதீய ஜனதாவும் நடிகர் விஜயகாந்தின் தேசீய திராவிட முற்போக்கு கழகமும் கூட களத்தில் நிற்கின்றன. ஆனால் முக்கிய வேட்பாளர்கள் பாலசுப்பிரமணியனும் கண்ணப்பனும்தான்.

இந்தத் தொகுதி நிலவரம் குறித்து எமது செய்தியாளர் டி.என்.கோபாலன் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் கேட்கலாம்


தேர்தலில் காவிரி விவகாரத்தின் தாக்கம்

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காவிரிப் பிரச்சினையில், 20 ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு விரைவாக வரும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் நடுவர் மன்றத்தின் இரு உறுப்பினர்கள் புதிதாக ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

காவிரி பகுதியில் வயல்வெளிகளில் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் அடிமட்ட தொழிலாளர்கள் பலருக்கு இந்த தீர்ப்பின் தாக்கம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இந்த காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு தங்களது ஓட்டளிக்கும் பாங்கை மாற்றாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக தேர்தலில் இந்த விவகாரம் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய்கிறார் எமது செய்தியாளர் எல்.ஆர். ஜெகதீசன்.


தமிழக தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் நிலைப்பாடு

டாக்டர். கிருஷ்ணசாமி
டாக்டர். கிருஷ்ணசாமி
தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித்துக்கள் தமிழ்நாட்டின் தென்பகுதியில்தான் அதிகமாக காணப்படுகிறார்கள்.

ஆரம்பத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இந்த பிரிவினரின் ஆதரவை வெகுவாக பெற்றிருந்தார். ஆனால் பின்னைய தேர்தல்களில் அவரது கட்சியினால் அவ்வளவாக சோபிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் இந்த சமூக மக்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆராயும் டி.என். கோபாலனின் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மகளிர் சுய உதவிக் குழுக்களும் தமிழகத் தேர்தலும்

பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கை
பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கை
தமிழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் பெண்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டவை. இந்தக் குழுக்களுக்கு இந்திய மற்றும் தமிழக அரசுகள் உதவி வருகின்றன.

இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களுக்கு தன்னம்பிக்கையைத் தந்துள்ளன மேலும் அவர்களுக்கு புதிய அடையாளத்தையும் தந்திருக்கிறது. இந்தக் குழுக்களுக்கு தமிழக அரசின் உதவி தொடர்ந்து கிடைத்து வருவதால், இந்தத் திட்டத்தால் பலனடைந்து வரும் பெண்களில் பலரது வாக்குகள் அதிமுகவிற்கே கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ள மாற்றம், நம்பிக்கை குறித்து பி பி சி செய்தியாளர் எல் ஆர் ஜெகதீசன் அவர்கள் தயாரித்து வழங்கும் பெட்டக நிகழ்ச்சியினைக் கேட்கலாம்


தமிழக சட்டமன்றத் தேர்தல்-- முஸ்லீம்கள் நிலைப்பாடு

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.

அவர்களின் மொத்த சனத்தொகை 5 வீதம் மாத்திரமாக இருக்கின்ற போதிலும், அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சிகளில் அரசியல் கட்சிகள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

முஸ்லிம் ஒருவர்

முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், கோவை குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பல காலம் வழக்கு முடிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்த, முஸ்லிம்களின் கவலைகள், இந்த தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை தீர்மானிப்பதில் கணிசமான பங்களிப்பை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆராயும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.தயாரித்து வழங்கியவர் டி.என்.கோபாலன்.


வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள்

வாக்கும் எதிர்பார்ப்பும்
வாக்கும் எதிர்பார்ப்பும்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் வரும் மே மாதம் எட்டாம் தேதி நடக்க உள்ள நிலையில், போட்டியிடும் பிரதன அரசியல் கட்சிகள் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளன.

ஆனால் மக்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்? தற்போதைய அரசுகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் கருத்து என்ன?

இவைகளை அலசும் பெட்டகம் இது. தயாரித்தவர் எல்.ஆர்.ஜெகதீசன்


இளைய பாரதத்தின் குரல்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து பல்வேறு பெட்டகங்களை தமிழோசை ஒலிபரப்பி வருகிறது.

தமிழக மாணவ மாணவிகள்
மாணவ, மாணவிகளின் கருத்துக்கள்

இந்த வரிசையில், இளம் தலைமுறையினர், குறிப்பாக, கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தல்கள் குறித்தும், பொதுவாக அரசியல் குறித்தும் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒரு விவாதம் மூலமாக ஆராயும் பெட்டகம் இது.

திருச்சி தூய வளனார் கல்லூரி மற்றும் புனித சிலுவை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட விவாதம் இது. தயாரித்து வழங்கியவர் எல்.ஆர்.ஜெகதீசன்


மக்கள் செல்வாக்கை நிர்ணயிக்கும் நிவாரண அரசியல்

தமிழகத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில்
படுதோல்வியுற்ற அ இஅதிமுக, இப்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வைத்திருந்த நிலையிலும், ஒரு பலம் வாய்ந்த நிலையில் இருப்பது போல் காட்சியளிக்கும் காரணம் என்ன?

மழை, சுனாமி நிவாரண அரசியல்
நிவாரண அரசியல்

சுனாமி மற்றும் கடந்த ஆண்டு பெய்த பெருமழைக்குப் பிறகு, மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில், அரசு செயல்பட்ட விதம்தான் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

சுனாமி பாதித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களின் மனநிலையை ஆராயும் இந்தப்பெட்டகத்தைத் தயாரித்து வழங்குகிறார் டி.என்.கோபாலன்

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள