 | | பட்டுப்பாதை திறப்பு-- உறவுகள் மேம்படுவதன் அறிகுறி? |
இந்தியாவும் சீனாவும் தொன்மைமிக்க பாரம்பரியத்தை கொண்ட நாடுகள். இந்நாடுகளுக்கு இடையை இயற்கை எல்லையாக இருக்கும் இமயமலையைக் கடந்து வர நாது-லா கணவாய் வழியாக செல்லும் பாதை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1962 ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தை அடுத்து, இந்த கணவாய் மூடப்பட்டது. தற்போது 44 ஆண்டுகள் கழித்த நாது-லா கணவாய் தரை வழி வர்த்தகத்துக்காக எதிர்வரும் 6 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.  | | பட்டுப்பாதை செல்லும் நாது லா கணவாய் அருகே ஒரு பாலம் |
இதற்காக பழைய பட்டுப் பாதையை ஒட்டி சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தக் கணவாய் பாதையானது கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. எனவே பெருமளவிலான வர்த்தகப் பொருட்கள் கடல் மார்க்கமாகவே செல்லும் என்றாலும் இந்த பாதைத் திறப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதில் எடுக்கப்படும் ஒரு முயற்சியாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பாதைத் திறப்பின் முக்கியத்துவம் குறித்து பி பி சியின் ஷில்பா கண்ணன் நாது லா கணவாய் பகுதியில் இருந்து அனுப்பிய பெட்டகத்தை நேயர்கள் கேட்கலாம். |