Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 செப்டம்பர், 2006 - பிரசுர நேரம் 13:07 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள்
 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படுவோரின் இறுதி நாட்கள் குறித்து திரைப்படம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தின் திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டார்
தமிழகத்தின் திருப்பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படும் சிவராசன், சுபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ்த் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள், மரத்தைச் சுற்றும் காதலர்கள், ஒரேயடியில் பலரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை துணிச்சலாக தயாரித்து வெளியிடுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ரமேஷ். முதலில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது சயனைட்.

திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி
திரைப்படத்தில் சிவராசன், சுபா கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன

ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது சென்னை திரைப்படக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ரமேஷ் அப்போது நடந்த பல்வேறு பரபரப்புக் காட்சிகளை நேரில் பார்த்திருககிறார். பெங்களூரில் சிவராசன் குழுவினரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டது அவரது ஆவலை மேலும் தூண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, கொலையாளிகளுககு புகலிடம் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலையான ரங்கநாத் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்கிறார் ரமேஷ்.

ராஜீவ் கொலையுண்ட சில மாதங்களிலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர் செல்வமணி, அக்கொலையினை மையமாக வைத்து தயாரித்த குற்றப்பத்திரிகை என்ற படம் இன்னமும் காங்கிரஸ்காரர்கள், சென்சார், நீதிமன்றங்கள் என்று உதைபந்தாக உருண்டுகொண்டிருக்கிறது, வெளியானபாடில்லை.

இடமிருந்து வலம் - ராஜீவ் காந்தி உடல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது- இறுதி ஊர்வலம்- சிதை மூட்டபட்டுள்ளது- சிவராசன்-சுபா-நளினி,முருகன்

இந்நிலையிலேயே கன்னடத்தில் மிக கவனமாக தயாரித்து, அனைவரும் பார்க்க அனுமதிக்கும் யூ சான்றிதழ் பெற்று திரையிட்டு கர்நாடக மாநிலத்தில் பரவலான வரவேற்பை பெற்றிருப்பதன் பின்னணியிலேயே இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. முன்னர் மத்திய சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த கார்த்திகேயனின் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவரான நாசர்.

சயனைட் எவரையும் ஏற்றவோ, தூற்றவோ இல்லை, இது ஒரு ஆவணப்படம் என்கிறார் நாசர்.

மிக சர்ச்சைகுரிய ஒரு விவகாரத்தை மிகக் கவனத்துடன் கையாண்டு கத்திமேல் நடக்கும் சாகசத்தை இயககுநர் ரமேஷ் சரியாகவே செய்திருப்பதாகத்தான் பலரும் கருதுகின்றனர்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள