Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 செப்டம்பர், 2006 - பிரசுர நேரம் 11:59 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
பாம்புக்கடி உயிரிழப்புகளைத் தடுக்க பிரிட்டிஷ் உதவி
 
பாம்புக்கடி உயிரிழப்புகளை குறைக்க பிரிட்டிஷ் உதவி
இந்தியாவில் பாம்புக்கடி உயிரிழப்புகளை குறைக்க முயற்சி
இந்தியாவில் பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக பாம்புக்கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.

விஷப்பாம்புகளால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஐம்பதினாயிரம் பேர் இறக்கிறார்கள்- இவை அதிர்ச்சி தருகின்ற அநியாய உயிரிழப்புகளாகும்.

ஆனால் இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் தடுக்கப்படக் கூடியவையே.

உதாரணமாக ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, உலகில் ஆகக்கூடுதலாக விஷப்பாம்புகளைக் கொண்ட நாடு அது. ஆனால் அங்கு கடந்த ஆண்டில் ஒருவர் மாத்திரமே பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பதற்கு, தற்போது பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், இந்திய அரசாங்கத்துக்கு உதவுகிறார்கள்.

இது குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள