http://www.worldservice.com/tamil

18 அக்டோபர், 2006 - பிரசுர நேரம் 11:38 ஜிஎம்டி

வடகிழக்கு இணைப்பு ரத்து செய்யப்பட்டது குறித்த கருத்துகள்

வடக்கு கிழக்கு இணைப்பு ரத்துக் குறித்த கருத்துகள்

இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜேவிபி கட்சியினரும் மற்றுமொருவரும் தாக்கல் செய்ய வழக்கு ஒன்றின் அடிப்படையிலேயே, இலங்கை தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான, 5 நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், கிழக்கு மாகாணத்துக்கு தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இலங்கையின் அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.

அவற்றில் சிலவற்றை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

பொதுமக்கள் கருத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

ஆய்வாளர் கீதபொன்கலன் கருத்து