Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 நவம்பர், 2006 - பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை
 
சுட்டுக் கொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ்
சுட்டுக் கொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 10.11.2006 அன்று காலை சுமார் 8.45 மணியளவில் கொழும்பிலுள்ள அவரது இல்லத்திற்கு சற்றுத் தொலைவில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு வயது 44.

தனது வாகனத்தில் கொழும்பு எல்விட்டிகல பொறளை பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து தனது மெய்ப்பாதுகாப்பாளருடன் பயணித்துக் கொண்டிருந்த சமயம், அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இவரது வாகனத்திற்கு மிக அருகில் வந்து இவர் மீதும், மெய்ப்பாதுகாப்பாளர் மீதும் சரமாரியாகச் சுட்டிருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

(இடமிருந்து வலம்) நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், அவர் பயணித்த வாகனம், குண்டு துளைத்த கார் கண்ணாடி
கொழும்பில் அவரது வீட்டிற்கு அருகாமையில் ரவிராஜ் சுட்டுக் கொலை

சம்பவத்தில் படுகாயமடைந்த ரவிராஜ் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், தலைப்பகுதியில் ஏற்பட்ட கடும்காயம் காரணமாக அவர் இறக்க நேரிட்டதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளிப் பிரதேசத்தில் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான தலைமைச் செயலகம் முன்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினை முன்னின்று நடத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிராஜ் கொல்லப்பட்ட சம்பவத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மிலேச்சத்தனமான படுகொலை என வன்மையாகக் கண்டித்திருப்பதோடு, பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவிற்கு இதன் மீது முழுமையான விசாரணை ஒன்றினை உடனடியாக நடத்தும்படியும், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையினை உடனடியாக தனக்கு அறியத்தரும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.

யாழ் மாநகர சபையில், முதலில் பிரதித் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் சில காலம் கடமையாற்றிய திரு. ரவிராஜ், அதன்பின்னர் இரண்டு பொதுத் தேர்தல்களில், யாழ் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு எம்.பியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், ஒரு பிரபல வழக்கறிஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது கொலைத் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கண்டனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தர் அவர்களின் கருத்து மற்றும் நடராஜா ரவிராஜ் கடைசியாக தமிழோசைக்கு வழங்கிய செவ்வியின் ஒலிகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்
 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள