Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஜனவரி, 2007 - பிரசுர நேரம் 13:03 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
போர்ப்படையில் சிறாரைச் சேர்ப்பதாக மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு
 
போர்ப் படையில் சிறார்கள்
போர்ப் படையில் சிறார்கள்
சிறார்களைப் போர்ப்படையில் சேர்ப்பதில் இலங்கை அரசு கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து செயற்படுவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

சிறார்களைப் போர்ப்படையில் பயன்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கிளர்ச்சிக்காரர்களுடன் கைகோர்த்துச் செயற்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் அழுத்தக் குழுவான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் கருணா குழு, கிழக்கு மாகாணத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தண்டனை கிடைக்கும் என்ற பயம் எதுவும் இல்லாமல் சிறார்களையும், இளைஞர்களையும் தமது போர்ப்படையில் சேர்த்துவருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

தாம் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படுவதை இலங்கை அரசும், கருணா அணியினரும் மறுத்துள்ளார்கள், அத்தோடு தமது அணியில் சிறார்கள் இருப்பதாகக் கூறப்படுவதை கருணா அணி மறுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பும் சிறார்களைத் தொடர்ந்தும் போர்ப்படைக்குச் சேர்ப்பதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா மற்றும் இலங்கை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் கருத்துகளை ஒலிவடிவில் நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள