Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 மே, 2007 - பிரசுர நேரம் 13:56 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சர்ச்சை
 
ஓய்வு பெற்ற முன்னாள் நடுவர் வெங்கட்ராகவன்
ஓய்வு பெற்ற முன்னாள் நடுவர் வெங்கட்ராகவன்
- ஒரு அலசல்

அண்மையில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியிலும் சர்ச்சை ஏற்பட்டது.

மழை காரணமாக போட்டி சில மணி நேரங்கள் தாமதமாகத் தொடங்கியதால் அது 38 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. ஆட்டத்தின் நடுவிலும் மழை பெய்ததால் இலங்கை அணிக்கு 36 ஓவர்கள் வழங்கப்பட்டு, வெற்றியின் இலக்கும் குறைக்கப்பட்டது. ஆட்டம் முடிவடைய மூன்று ஓவர்கள் இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவதாக ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களை ஆடி முடித்து விட்டதால் டக்வர்த் லூயிஸ் கணிப்பு முறைப்படி அந்த நிலையிலேயே ஆஸி அணியினர் வெற்றி பெற்றதாக கருதி கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் களநடுவர்களான ஆலிம் தார், ஸ்டீவ் பக்னர் ஆகியோர் மூன்றாவது நடுவரான ரூடி குட்சன் மற்றும் மாற்று நடுவர் பில்லி பௌடன் ஆகியோருடனும் ஆட்ட நெறியாளரான ஜெஃப் க்ரோவுடனும் ஆலோசித்து, ஆஸி அணி மீண்டும் திரும்பி வந்து எஞ்சியிருந்த 2.5 ஓவர்களை வீசவேண்டும் என முடிவெடுத்தனர்.

தாம் கூட்டாக எடுத்த முடிவானது மிகவும் தவறானது என்றும் கேலிக்கூத்தானது என்றும் ஆட்டத்திற்கு பிறகு ஜெஃப் க்ரோ தெரிவித்துள்ளார்.

இது ஒரு மாபெரும் தவறு என்றும், அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது நடைபெற்றது வருந்தத்தக்க, ஆச்சரியப்படத்தக்க விடயம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற சர்வதேச நடுவருமான வெங்கட்ராகவன் கருத்து வெளியிட்டுள்ளார்.

களநடுவர்கள் தவறு செய்தால் அதை மூன்றாவது நடுவர் சரி செய்திருக்க வேண்டும் எனவும், அதற்கு மேலாக ஆட்டத்தை நெறிப்படுத்தி நடத்தியவரான ஜெஃப் க்ரோ தவறை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் ஆட்டம் இடையே நிறுத்தப்பட்டால், அணிகள் ஆடுகளத்தில் இல்லாத கால அளவையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்திருந்தால் ஆஸி அணி மீண்டும் வந்து அந்த 2.5 ஓவர்களை வீசியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது எனவும் வெங்கட்ராகவன் தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்தார். கிரிக்கெட் விதிகளில் உள்ள இந்த நுணுக்கத்தை கடைபிடிக்காததுதான் நடந்த தவறு எனவும் அவர் கூறினார்.


 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள