Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 14 ஏப்ரல், 2008 - பிரசுர நேரம் 16:53 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தமிழ் புத்தாண்டு:தையா? சித்திரையா?
 
tamil nadu hindu temple
தமிழ்ப் புத்தாண்டு தை என்கிற அரசின் அறிவிப்புக்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்த வாதப் பிரதிவாதங்கள்.

13/04/2008

தற்போது நடைமுறையில் இருக்கும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, இனிமேல் தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக கணக் கிடப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த பின்னணியில், சித்திரை முதல்நாளில் தமிழக நிலவரம் எப்படியாக இருந்தது என்பதை தொகுத்து தருகிறார் தமிழக செய்தியாளர் டி.என். கோபாலன்.

தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற தமிழக அரசின் அறிவிப்பு இலங்கையில் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய குழப்பத்தை எதிர்நோக்கும் வகையில், அகில இலங்கை இந்துமா மன்றம் என்கிற ஒரு அமைப்பு மார்ச் மாதம் கொழும்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இது தொடர்பான செய்திகளை பெட்டகமாக தொகுத்து தருகிறார் கொழும்பு செய்தியாளர் கருணாகரன்.

23/01/2008

இனிமேல் தைமுதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்கிற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து, இந்துத்வ கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்

தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக இனிமேல் கணக்கிடப்படும் என்று தமிழக அரசு இப்போது அறிவித்திருப்பதன் அவசியம் என்ன என்று தமிழகத்தை ஆளும் திமுகவைச்சேர்ந்த தமிழறிஞர் மா நன்னன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, இனிமேல் தை மாதம் முதல் நாளிலிருந்து மிழ் புத்தாண்டு துவங்குவதாக கணக்கிடப்படும் என்று தமிழக ஆளுநன் பர்னாலா அவர்கள் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இது குறித்து தமிழக செய்தியாளர் டி.என். கோபாலன் வழங்கும் செய்திக்குறிப்பை இங்கே கேட்கலாம்.


 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள