Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 ஏப்ரல், 2008 - பிரசுர நேரம் 14:22 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
ஏலமும் எதிர்பார்ப்பும்
 
Indian Premier League Cricket Logo
பிரிமியர் லீக் சின்னம்
ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் துவங்கியுள்ள இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் குறித்து சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் பெட்டகம்

உலக விளையாட்டு வட்டாரங்களில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 20-20 கிரிகெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கின.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை தேசிய. பிரந்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மேலும் வர்த்தக ரீதியில் வளர்க்கும் முகமாக இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஒரு அமைப்பை உருவாக்கி, தனியார்கள் சங்கங்களை தொடங்கி, அதில் சர்வதேச வீரர்களுடன் பங்கேற்கும் போட்டித் தொடரை நடத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஏகப்பட்ட பணம் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகளில் தொழிலதிபர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ஈடுபட்டுள்ளனர். இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ள கிரிக்கெட் வீரர்கள் சந்தையில் பொருட்களை வாங்கப்படுவது போல ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

இந்த அணிகளை வாங்கியவர்கள் அனைவருமே ஒரு வியாபார நோக்கத்தை முன்வத்துதான் இந்த விளையாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

போட்டிகள் துவங்கும் முன்னரே இந்த லீக் தொடர்பில் பல சர்ச்சைகளும் எழுந்தன.

இந்தத் தொடரை பல்வேறு துறையினர் எப்படி பார்க்கிறார்கள்?, போட்ட முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்குமா?, ஊடகங்கள் சந்தித்த நெருக்கடிகள் என்ன?, இளம் வீரர்களின் எண்ணங்கள் எப்படியுள்ளது? போன்ற பல தகவல்களை உள்ளடக்கி சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் கேட்கலாம்.

எதிர்பார்ப்பும் யதார்த்தமும்

உலக அளவில் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன் பிரிமியர் லீகின் முதலாம் ஆண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், வர்த்த நோக்கத்தையை முன்னிலைப்படுத்தி இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டன. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் இதுவரை எட்டாத விலையை எட்டின. இவ்வளவு எதிர்பார்புகளை ஏற்படுத்திய இந்தப் போட்டிகள் எதிர்பார்ப்புகளை ஈடேறினவே என்கிற கேள்விக்குறி பலரின் மனதில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சில அணிகள் லாபாமீட்டாவிட்டலும் நஷ்டத்தை தவிர்த்துள்ளன. சில அணிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சென்னை கிங்ஸ் அணி எதிர்காலத்தை மனதில் வைத்து முதலீடு செய்துள்ளதாகக் கூறுகிறது.

ஆனால் விளம்பரதார்கள் போட்ட பணத்தை எடுத்துள்ளனர் என தொலைக்காட்சி புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரசிகர்களைப் பொறுத்தவரை முடிவடைந்த இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு பெருத்த ஆதரவு இருந்துள்ளதாகவே தெரிகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் கூட என தமிழோசையிடம் கூறினார் கராச்சியிலுள்ள செய்தியாளர் ஷாஹித் ஹஸ்மி.

முதலாம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் குறித்து பல்துறையினர் வெளியிட்டுள்ள கருத்துக்களை உள்ளடக்கிய பெட்டகம். தயாரித்து வழங்கியுள்ளவர் சிவராமகிருஷ்ணன்.

 
 
பிபிசி இணைய தளங்கள்
ஐ.பி.எல்.: எதிர்பார்ப்பும் யதார்த்தமும்
06 ஜூன், 2008 | நினைவில் நின்றவை
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள