http://www.worldservice.com/tamil

22 மே, 2008 - பிரசுர நேரம் 12:54 ஜிஎம்டி

காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்

தமிழ்நாட்டின் காவிரி டெல்டாப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பேட்டித் தொகுப்பு

கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள்

இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இந்த முதுமக்கள் தாழிகளின் தொல்லியல் முக்கியத்துவம் குறித்தும், இதற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், இந்த ஆய்வை மேற்கொண்ட தொல்லியல் துறையின் நிபுணர் குழுவில் ஒருவரான அகழாய்வாளர் எஸ். வசந்தி அவர்கள், மற்றும் பழங்கால எழுத்துரு ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் செவ்விகளை நேயர்கள் இங்கே கேட்கலாம்.