Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 ஜனவரி, 2009 - பிரசுர நேரம் 13:39 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அரவாணிகள் மதரஸா
 
அரவாணிகளைக் குறிக்கும் படம்
இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள ஜோக்ஜகார்தா நகரில் முஸ்லிம் அரவாணிகள் ஒரு விசேட குர்ஆன் பள்ளியை அமைத்திருக்கிறார்கள்.

இந்தோனேஷிய மக்கள் பின்பற்றுகிற இஸ்லாம் ஒப்பீட்டளவில் சகிப்புத்தன்மையும் மாற்று அபிப்பிராயங்களுக்கு இடம்தரும் போக்கும் கொண்டது என்றாலும், அந்நாட்டின் மையநீரோட்ட இஸ்லாமியச் சமூகத்தின் அங்கீகரிகாரத்தை அலிகள் அனுபவித்திருக்கவில்லை.

இந்தோனேஷியாவில் வாரியாக்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதென்பது அவ்வளவு எளிதான் விஷயமல்ல. அதுவும் மதம் என்று வரும்போது அவர்கள் பேசி உரிமைகளை மீட்டெடுப்பது என்பது ரொம்பவும் பிரச்சினையான ஒரு விஷயம்.

பெண்களோடு பெண்களாக நின்று இவர்கள் தொழுகை செய்வது சாத்தியப்படவில்லை. ஆகவேதான் ஜோக்ஜகார்தாவின் ஒரு முக்கிய வீதிக்குப் பின்னால் இருக்கும் சின்ன சந்து ஒன்றில் அரவாணிகள் குர்ஆன் ஓதி இறைவணக்கம் செய்வதற்கென்றே விசேடமாக அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கு இவர்கள் வாரம் ஒருநாள் வருகிறார்கள்.

இவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றிய பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள