Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 ஏப்ரல், 2009 - பிரசுர நேரம் 12:55 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள்
 
இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் கோரி மேற்குலக நாடுகளில் புலம்பெயர்வாழ் இலங்கைத் தமிழர்கள் நடத்திவரும் போராட்டம் குறித்த தமிழோசை நிகழ்ச்சிகள்.

லண்டனில் நடந்துவரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு காட்சி

16/14/2009

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் வாழ் இலங்கைத் தமிழர்கள் பல்வேறு மேற்குலக நாடுகளில் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து இலங்கை இனப்பிரச்சினை குறித்து அமெரிக்காவின் மசச்சூசெட்ஸ் மாநில சட்டப்பேரவையில் 1979ல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற பிரச்சார முயற்சிகளில் ஈடுபட்டவரும், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவருமான தில்லையம்பலம் ஸ்ரீதரன் கருத்துவெளியிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு ஆதரவான கருத்தை மேற்குலக அரசாங்கங்கள் தெரிவித்திருக்கவில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர்ப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோராத நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கா அல்லது விடுதலைப் புலிகளின் தலைமையைக் காப்பாற்றுவதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தில்லையம்பலம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

10/04/09

கனடாவில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் கடந்த சில தினங்களாக தலைநகர் ஒட்டாவாவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கனடிய தமிழர் காங்கிரஸை சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை இது குறித்து தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லண்டனில் இரண்டு இளைஞர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர். அவர்களின் உடல் நலம் குறித்து, அவ்விருவரையும் சோதித்த டாக்டர் திருமதி ராதாகிருஷ்ணன் வழங்கும் விபரங்கள்.

09/04/09

அமெரிக்காவில் போராட்டம் செய்துவரும் புலம்பெயர்த் தமிழர்களை சந்தித்த அமெரிக்க அரசுத் துறைச் செயலர் இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

08/04/09

பிரிட்டனில்புலம் பெயர் இலங்கை தமிழர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில் இலங்கைகான பிரிட்டனின் விசேட தூதர் டெஸ் பிரவுண் போராட்டக்காரர்களைச் சந்தித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் எதை குறிப்புணர்த்துகின்றன என்பது தொடர்பில் ஐரோப்பாவில் இருக்கும் இலங்கை ஆய்வாளரும் பத்திரிகையாளருமான நிராஜ் டேவிட் வழங்கும் அபிப்பிராயம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள