Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 08 மே, 2009 - பிரசுர நேரம் 14:13 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இந்தியத் தேர்தல் 2009
 
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழோசையில் வெளியான செய்திகள், செவ்விகள் மற்றும் பெட்டக நிகழ்ச்சிகள்.


07/05/2009

தமிழகத்தின் மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தில் மக்களின் ஆயுட்காலம்கூட ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வறுமை காரணமாக தருமபுரி மக்கள் வேலைவாய்ப்புகள் தேடி பெருமளவில் பெங்களூரு செல்லும் நிலை இங்கு காணப்படுகிறது.

தருமபுரி தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. பல்வேறு கட்சியினரும் மும்முரமாக பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அரசியல் மாற்றங்கள் தருமபுரியிலே மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றங்களை - முன்னேற்றங்களைக் கொண்டுவருகிறதா என்று எமது தமிழக நிருபர் டி.என்.கோபாலன் அலசும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


06/05/2009

இந்தியத் தலைநகரமான புதுதில்லி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே கருதப்பட்டுவருகிறது.

ஆனால் இந்த முறை தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான விஷயங்கள் இல்லாமல் போய்விட்டது என எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகின்றனர்.

கடந்த நவம்பர் மாத சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் அப்படி ஒரு வெற்றியை அக்கட்சி மீண்டும் பெறுமா என்பது சந்தேகமே.

ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துள்ளதால் காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள் என்றும், பாரதீய ஜனதா தில்லியில் நல்ல வெற்றிகளைப் பெறும் என்றும் அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்படுகிற்து.

புதுதில்லி தேர்தல் களம் குறித்து அலசும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கு கேட்கலாம்


03/05/2009

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேச மாநிலம் சாதி அரசியலில் மூழ்கிக் கிடக்கிறது.

பலமுறை இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராக வந்துள்ளனர் என்றாலும் இந்த மாநிலம் பின்தங்கிய ஒரு மாநிலமாகவே இருந்துவருகிறது.

இங்கே தேசியக் கட்சிகள் வலுவிழந்து சாதி அரசியலுக்கு முன்னுரிமை வழங்கும் பிராந்தியக் கட்சிகள் வளர்ந்துவரும் ஒரு நிலைமை காணப்படுகிறது.

உத்திர பிரதேசத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் தேர்தல் களம் குறித்தும் எமது செய்தியாளர் தங்கவேல் வழங்கும் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.


15/04/2009

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு ஐந்து கட்டங்களாக நடக்கிறது.

தேர்தல் நெருங்கிய சமயத்தில் அரசியல் கட்சிகள் இடையிலான கூட்டணிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்கி எமது புதுதில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் தேர்தல் முன்னோட்டப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.


14/04/2009

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேசிய அளவில் பிரதான கட்சிகளில் ஒன்றான பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் எதனுடனும் கூட்டணி ஏற்படாத நிலையில், அது அங்கு தனித்து போட்டியிட முடிவு செய்து 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஒரு தேசியக் கட்சியான அதனுடன் தமிழ் நாட்டில் எந்த கட்சியும் கூட்டணி சேர முன்வராதது ஏன்? சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியா பாரதீய ஜனதா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான இல.கணேசன்.


 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள