Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஜூன், 2009 - பிரசுர நேரம் 09:54 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அம்பேபுஸ்ஸ முகாமில்....
 
புலிகளின் சிறார் போராளிகள் சிலர்
புலிகளின் சிறார் போராளிகள் சிலர்
அம்பேபுஸ்ஸ முகாமில் தற்போது இருக்கின்ற விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சிறார் போராளிகள் பற்றிய பெட்டகம்.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் விடுதலைப் புலிகள் பல சிறார்களை கட்டாயமாக படையில் சேர்த்ததாகவும், அவர்களின் பிடியில் இருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்களை தாக்கியதாகவும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து வெளியேறி, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறும் முன்னாள் சிறார் போராளிகள் தமிழோசையிடம் தெரிவித்தனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லும் சாலையை அடுத்து அமைந்துள்ள அம்பேபுஸ்ஸ மறுவாழ்வு நிலையத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட முனாள் சிறார் போராளிகள் இருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஒரு ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்டதாக நம்மிடம் கூறினர்.

போரின் இறுதி கட்டத்தின்போது, போராளி குடும்பங்களுக்கும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கூட இதில் விலக்களிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அம்பேபுஸ்ஸவில் முன்னாள் சிறார் போராளிகளுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இலங்கையில் நடந்து முடிந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான போராளிகள் அரசிடம் சரணடைந்ததாகவும் வேறு பல நூற்றுக்கணக்கான போராளிகள் கைதுசெய்யப்பட்டதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

அத்தைகய போராளிகளில் ஒரு பகுதியினர் இலங்கையின் தெற்கே உள்ள அம்பேபூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த முகாமுக்கு சென்றிருந்த எமது தயாரிப்பாளர் சுவாமிநாதன், அந்த முகாமில் இருக்கும் பெண் புலிப் போராளி ஒருவரை சந்தித்து உரையாடினார்.

இந்த பெண்புலி போராளியின் பெயர் அவரது பாதுகாப்பு காரணங்களால் தவிர்க்கப்படுகிறது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள