Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 டிசம்பர், 2009 - பிரசுர நேரம் 12:29 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தெலுங்கானா: ஆந்திரத்தில் அரசியல் நெருக்கடி
 
ராஜசேகர ராவ் ஆதரவாளர்கள்
ராஜசேகர ராவ் ஆதரவாளர்கள் தனி மாநிலம் அமைக்கப்படுவது தொடர்பான அறிக்கையை வரவேற்கின்றனர்
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுகின்ற விவகாரம் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

12/12/09

11/12/09

10/12/09

ஆந்திர மாநிலத்தின் வடமாவட்டங்களைத் தனியாகப் பிரித்து தெலுங்கான என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்ததை அடுத்து, ஆந்திரத்தில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் அறிவிப்பு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை பல காலமாக முன்வைத்து போராட்டங்களை நடத்திவந்த அரசியல் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

ஆனால் ஆந்திர மாநிலத்தின் காங்கிரஸ் அரசில் பலரும் எதிர்கட்சிகளும் ஆந்திரம் பிரிக்கப்படுவது என்பதை எதிர்க்கின்றனர்.

மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ள நிலையில், இதே பிரச்சனையை முன்வைத்து 20 அமைச்சர்கள் பதவி விலக முன்வந்துள்ளனர்.

மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று கூறும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாநில முதல்வர் இறங்கியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் பிபிசியில் ஒலிபரப்பான செவ்விகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள