தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் (காணொளி)

  • 16 செப்டம்பர் 2016

காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை, முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசின் பேருந்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. திரையரங்குகள் மாலை வரை இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இந்த முழு அடைப்பின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்