பெல்லட் குண்டு பாய்ந்து பள்ளி மாணவன் சாவு ஸ்ரீநகரில் பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்

பெல்லட் குண்டுகள் பாய்ந்த பள்ளி மாணவன் ஒருவனின் உடலை கண்டெடுத்த பிறகு, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில், ஸ்ரீநகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மாற்று குண்டுகளை பயன்படுத்துவதாக அரசு அறிவித்த பின்னரும், ஆபத்தான பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கடும் விமர்சனத்தை அடுத்து, பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக மாற்று குண்டுகளை பயன்படுத்துவதாக அரசு அறிவித்த பின்னரும், ஆபத்தான பெல்லட் குண்டுகளை பிரிவினைவாத போராட்டகாரர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு சட்டத்தை புறக்கணித்துவிட்டு இந்த பதின்ம வயதுடைய மாணவனின் இறுதி சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாக ஸ்ரீநகரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய நிர்வாகத்துக்கு எதிராக கடந்த எழுபது நாள்களாக நடைபெற்ற போராட்டங்களில் பெரும்பாலும் போராட்டக்காரர்கள் 80 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்