அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக் கொலை: தொடரும் வன்முறை போராட்டங்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள ஷார்லட் நகரில், கருப்பின மனிதர் ஒருவரை போலிஸார் சுட்டுக் கொன்றதால் அங்கு வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

சுடப்பட்ட மனிதர் ஆயுதம் வைத்திருந்தார் என்றும் அச்சுறுத்தல் விடுத்தார் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர்; ஆனால் அவர் கையில் புத்தகம்தான் வைத்திருந்தார் எனவும் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றும் அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.

துப்பாகிச் சூடு நடைபெற்ற அடுக்குமாடி வளாகத்தைச் சுற்றியிருந்த சாலைகளில் கூடியிருந்த கூட்டத்தினரை கண்ணீர் புகை கொண்டு போலிஸார் களைத்தனர்.

பின் ஆர்பாட்டக்காரர்கள் ஷார்லட் நகரின் வெளியே உள்ள மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையை மறித்தனர்; போலிஸார் மீண்டும் போராட்டங்களை களைத்தனர்.

வெள்ளிகிழமையன்று ஓக்லோஹொமா மாநிலத்தின் டல்சா நகரில் நிராயுதபாணியாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவரை போலிஸார் கொன்றதையடுத்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்